மீனவர்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வுப் பெற்றுத்தரப்படும்: அமைச்சர் டக்ளஸ்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

அமைச்சரின் அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், இம்மாவட்ட மீனவர்கள் சுருக்கு வலைகளை இட்டு மீன்பிடிப்பது மற்றும் அதற்கான அனுமதிப் பத்திரத்தினை புதுப்பிப்பது தொடர்பாகவும் அமைச்சருடன் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வினை பெற்றுத் தருவதாகவும், விரைவில் திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மீனவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ள உள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாக எம்.எஸ்.தௌபீக் கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *