வன்னியில் களமிறங்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் களமிறங்கவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் கோரிக்கைக்கமையவே இந்தத் தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பாக பரீசிலிக்கப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக ஏனைய கட்சிகளின் தமிழ் அரசியல்வாதிகள் வெவ்வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் வன்னி, மட்டக்களப்பு மாவட்டங்களில் பொதுதேர்தலின்போது களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *