வடக்கில் 20984 ஆபத்தான கண்ணிவெடிகளை அகற்றியுள்ள ஸார்ப்

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ஸார்ப்( SHARP) நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது.

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற குறித்த நிறுவனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2019 டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஒன்பது இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து ஐநூற்று பதினொன்று சதுரமீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகளை அகற்றியுள்ளனர்.

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலையிலும் இருபதாயிரத்து தொளாயிரத்து எண்பத்து நான்கு(20984) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளனர்.

இத்தகவலை ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கேப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

மேலும் மனித நேய கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் பளை மற்றும் கிளாலி பகுதிகளில் தொடந்தும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *