15. 12. 2019 இன்றைய இராசிப் பலன்கள்

மேஷம்

இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்

இன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மிதுனம்

இன்று கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கடகம்

இன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

சிம்மம்

இன்று கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

கன்னி

இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9

துலாம்

இன்று தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

விருச்சிகம்

இன்று வேலைப்பளு வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

தனுசு

இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 6

மகரம்

இன்று எதிர்ப்புகள் விலகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்

இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை. சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்: 4, 6

மீனம்

இன்று பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். ஆசிரியர்களிடம் இருந்து வரும் நல்லுறவு நீடிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *