பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன நாளை யாழ்ப்பாணம் வருகிறார்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார் என்று அறியமுடிகிறது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு நடைமுறைகள் தொடர்பில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று பலாலி இராணுவத் தலைமையகத்தில் நாளை முற்பகல் இடம்பெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு வடக்கு மாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முப்படைகளின் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச தெரிவானதையடுத்து பாதுகாப்புச் செயலராக, முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன நியமிக்கப்பட்டார்.

பாதுகாப்புச் செயலராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *