மறுவன்புலவில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்!! சிறிதரனுக்கு 10 கோடி லஞ்சம்!!

யாழ்ப்பாணத்தை நோக்கி பச்சை நிறத்தில் நீளமாக பீப்பாய்கள் வருகிறது, ஆபத்து.. ஆபத்து என கடந்த இரண்டு தினங்களாக சமூக ஊடகங்கள் பற்றியெரிகிறது.

அந்த பீப்பாய் வடிவ உருளைகள் யாழ்ப்பாணம் மறவன்புலோ பகுதியில் அமைக்கப்படும் காற்றாலை மின்உற்பத்தி திட்டத்திற்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அந்த பகுதியில் எல்.எம்.எல் என்ற தனியார் நிறுவனம் காற்றாலை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதும், அதை கணக்கிலெடுக்காமல் காற்றாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதே போன்ற காற்றாலை உற்பத்தி நிலையம் பளைப் பகுதியில் நிர்மானிக்கப்பட்ட போது அந்த உற்பத்தி நிலையம் வடக்கு மாகாணசபையுடன் ஒப்பந்தம் செய்ததில் பலகோடிரூபா லஞ்சம் கை மாறப்பட்டதாக தமிழரசுக் கட்சியினர் முதலமைச்சர் சி்..வி.விக்ணேஸ்வரன் மற்றும் அப்போதய வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனா். ஆனால் தற்போது எந்தவித ஆரவாரமும் இன்றி காற்றாலை இயங்குவதற்கான ஏற்பாடுகள் மறுவன்புலவில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பளைப்பகுதியில் காற்றாலை அமைக்கப்பட்டதால் குறிப்பிடத்தக்க வருமானம் வடக்கு மாகணசபைக்கு வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மறுவன்புலவில் அமைக்கப்படும் காற்றாலையால் எந்தவித வருமானமும் வடக்கு மக்களுக்கோ அல்லது மறவன்புலவு மக்களுக்கோ கிடைக்காதவாறு பெரும் ஊழல் நடைபெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காக குறித்த காற்றாலை நிறுவனம் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுடன் பேரம் பேசி சிறிதரனுக்கு முதற்கட்டமாக பத்துக் கோடிரூபா நிதி வழங்கியுள்ளதாக சிறிதரனுக்கு நெருக்கமான சிலரின் ஊடக தகவல்கள் கசிந்துள்ளன. யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் தனக்கே மக்கள் செல்வாக்கு இருப்பதாகவும் தான் சொன்னால் மக்கள் கேட்பார்கள் எனவும் சிறிதரன் தனது முகவர்கள் ஊடாக குறித்த நிறுவனத்துக்கு தெரிவித்தே இந்தப் பெரும் ஊழலை மேற்கொண்டுள்ளார் என தமிழரசுக்கட்சியில் சில உறுப்பினர்கள் மூலம் தகவல் கசிந்துள்ளது.

Image may contain: sky and outdoor

இந்த நிலையில், இன்று (11) நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அந்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை பார்வையிட்டப் போவதாகக் கூறி பளை பிரதேசசபை தவிசாளர் சு.சுரேனுடன் ஊடகவியளார்கள் என சிலரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றிருந்தார். குறித்த மறுவன்புலவுப் பிரதேசம் சாவகச்சேரி பிரதேசசபைக்குரிய எல்லைக்குள்ளேயே இருக்கின்றது. ஆனால் எதற்காக சிறிதரன் தன்னுடைய அல்லக்கையான பளைப்பிரதேசசபை தலைவரையும் கூட்டிக் கொண்டு அந்த இடத்துக்குள் புகுந்தார் என்பது கடும் சந்தேகத்தைத் தருவதாக ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.

Image may contain: sky, cloud and outdoor

குறதித் நிறுவனத்தி்டம் திட்டம் குறித்து, அதன் சாதக பாதகங்கள் குறித்தும் நிறுவன பொறியியலாளர்களிடம் விளக்கம் கேட்டிருந்தார். தமது திட்டம் குறித்து நிறுவனத்தினர் அவருக்கு விளக்கமளித்திருந்தனர்.அந்த சர்ச்சை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், 24 பீப்பாய்கள் அங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த உருளை வடிவ பீப்பாய்களை நிறுவி, அதன் மேலேயே காற்றாடிகள் அமைக்கப்படவுள்ளன. ஒவ்வொரு பீப்பாயும் 80 அடி நீளமானது. ஒன்றின் மேல் ஒன்றாக 3 பீப்பாய்கள் அமைக்கப்பட்டு, அதன் மேலேயே காற்றாடி அமைக்கப்படவுள்ளது.

Image may contain: one or more people, people standing and outdoor

பீப்பாய்களை நிறுவும்போது, 240 அடி உயரமாகி விடும். அதன் மேல் 10 அடியில் கம்பமொன்று பொருத்தி- 250 அடி உயரத்திலேயே காற்றாடிகள் பொருத்தப்படும். காற்றாடி விசிறிகள் ஒவ்வொன்றும் 200 மீற்றர் அடி நீளமானவையாக இருக்கும். தரையிலிருந்து 400 அடிக்கு சற்று மேல் வரை காற்றாடி விசிறிகள் சுழலும்.

8 காற்றாடிகளின் மூலமாக 20 மெகா வோட்ஸ் மின்சாரத்தை அந்த நிறுவனம் உற்பத்தி செய்து, தேசிய மின் கட்டமைப்பிற்கு விற்பனை செய்யவுள்ளது. ஒவ்வொரு யுனிட்டும் 12.75 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும். அதை அரசு 23 ரூபாவிற்கு பொதுமக்களிற்கு விற்பனை செய்யும்.

Image may contain: cloud, sky and outdoor

ஏற்கனவே பளையில் 16 காற்றாடிகள் அமைக்கப்பட்டு இன்னொரு தனியார் நிறுவனம் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து 19 மெகா வோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

Image may contain: sky and outdoor

காற்றாலை மின் உற்பத்தியால் பாதிப்புக்கள் உள்ளதா இல்லையா என்ற சர்ச்சைகள், பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியில் இந்த திட்டம் நடந்து வருகிறது.

தம்மீது சந்தேகம் வராதது போல் சிறிதரன் அங்கு ஊடகவியலாளர்களுடன் சென்று சமாளிப்பு நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டுவருகின்றார்.

இந்த நிறுவனம் உழைக்கப்போகும் கோடிக்கணக்காண பணத்தில் ஒரு வீதமானதேனும் மறுவன்புலவு மக்களுக்கு கிடைக்காமல் சிறிதரனுக்கு கொமிசனாகப் போகப்போவது பெரும் துர்அதிஸ்டவசமான ஒன்றே…..

Image may contain: one or more people, people sitting and outdoorImage may contain: one or more people, people standing and outdoor


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *