கிளிநொச்சியில் வெள்ளத்தில் மூழ்கிய பல கிராமங்கள் – மீட்பு பணியில் இராணுவத்தினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் கனமழையினால் 5 ற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கியிருக்கும் கிராமங்களில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதற்காக இரா ணுவம் களத்தில் இறங்கி இன்று அதிகாலை தொடக்கம் மீட்பு பணி செய்துவருகிறது.

கிளிநொச்சி இரத்தினபுரம், ஆனந்தபுரம், சிவபுரம், பன்னங்கண்டி, கிளி.நகர் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

மீட்புப் பணிகளில் தற்காலிக படகுச் சேவையையும் படையினர் ஆரம்பித்துள்ளனர். வெள்ளம் ஏற்பட்டு நீர் நிரம்பியுள்ள பிரதேசங்களில் இருந்து

மக்களைக் காப்பாற்றும் பணிகளில் இலங்கை இராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *