அரச அதிகாரிகளுக்கு அமைச்சர்களின் ஊடாக விரைவில் கடும் நடவடிக்கை!

அரச சலுகைகளையும், உயர் பதவிகளையும் தம்வசம் வைத்துக்கொண்டு பதவிகளை துஷ்பிரயோகம் செய்யும் அரச உயர் பதவிகளிலுள்ளவர்களுக்கு மிக விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வவுனியா மாவட்ட ஈ.பி.டி.பியின் கட்சியின் அமைப்பாளர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள அரச அதிகாரிகள் உயர் பதவி வகிப்பவர்களிடம் மக்கள் சென்று தமது குறைகளை தீர்த்துக்கொள்ள செல்லும்போது பொறுப்பிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சிலரால் குறிப்பாக வவுனியா வடக்கில் பல தமிழ் கிராமங்களின் வளர்ச்சியை குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நேற்று பாதிப்புற்ற கிராமங்களுக்கு நேரில் சென்ற போது அப்பகுதி மக்கள் தமது குறைபாடுகளை தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போதே இவ்வாறு செயற்படும் அரச உத்தியோகத்தர்கள், உயர் பதவியிலுள்ளவர்களின் நடவடிக்கையினால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.அத்துடன் எமது பூர்வீக தமிழ் கிராமங்கள் பல குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமது பதவிகளையும் , கிராமங்களையும் இல்லாதொழிக்க செயற்பட்ட அரச உத்தியோகத்தர்கள், உயர் பதவியிலுள்ளவர்களின் நிலைமைகளையும், செயற்பாடுகளையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்து சென்று விரைவில் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மக்களிடம் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *