கோழிகளுடன் உறவு கொள்ள தமிழரசுக் கட்சி சேவல்களுக்கிடையில் கடும் போர்!! நடப்பது என்ன??

இந்தக் காலத்தில் சேவல்கள், கோழிகள் உறவு கொள்வது என்பதை நகரப்பகுதி சிறுவர்கள் காணமுடியாத காட்சியாக இருக்கின்றது. அந்தக் காலங்களில் ஒவ்வொரு வீடுகளிலும் பல கோழிகளும் ஒரு சில சேவல்களும் கட்டாயம் வளர்க்கப்படும். கோழி முட்டை வாங்கி அடை வைத்து குஞ்சுகள் பொரிக்க விட்டு வளர்ப்பது ஒவ்வொரு வீடுகளிலும் வழமையான ஒன்றாக இருக்கும். சிலர் கோழி வளர்த்தே தங்களது குடும்பத்தை சிறப்பாக கொண்டு செல்வார்கள். கோழி வளர்ப்பில் நல்ல அனுபவமுள்ளவர்கள் சில நாள் குஞ்சுகளையே இது சேவல், இது கோழி என்று கண்டுபிடித்து கூறிவிடுவார்கள். ஆனால் பெரும்பாலானோர் வெடிவால் முளைக்கும் போதே சேவல், கோழிகளை அடையாளப்படுத்துவார்கள்.

பெரும்பாலும் ஒவ்வொரு வீடுகளிலும் ஒரு குறிப்பிட்ட வயசுக்கு அப்பால் சேவல்களை அதிகமாக வி்ட்டுவைப்பதில்லை. ஒன்றில் சட்டிக்குள் போட்டு விடுவார்கள். இல்லாவிட்டால் யாருக்காவது விற்றுவிடுவார்கள். ஒரு வீட்டில் வயசுக்கு வந்த இரு சேவல்கள் இருந்தாலே தாங்கமுடியாத அரியண்டமாக இருக்கும். ஒரு சேவல் ஒரு சிறு சோற்றுப் பருக்கை அல்லது பூச்சி போன்ற ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு பெட்டை கோழியைக் கூப்பிட்டு அந்த பருக்கையை கொத்தக் கொடுத்துவிட்டு அந்த கோழியை அணைத்து உறவு கொள்ளும் அழகு இருக்குதே…. அதை எந்தக் கவிஞனாலும் எழுத முடியாது…..

ஆனால் சில சேவல்கள் அப்படி ஒன்றும் கொடுக்காது கோழியைத் துரத்தி துரத்தி கற்பழிப்பதையும் கண்டிருப்பீர்கள்…இப்படி ஒரு வீட்டில் இரு சேவல்கள் இருந்தால் பெட்டைக் கோழிகளுடன் உறவு கொள்வதற்காக இரு சேவல்களுக்கிடையிலும் கொடூர சண்டை நடக்கும். அந்தச் சண்டையால் சில வேளை வீ்ட்டுக்காரனுக்கு கொண்டாட்டமாக இருக்கும். நீண்ட நாள் பிடிபடாமல் திரிந்த சேவல் ஒன்றை அந்தச் சண்டையில் வைத்து பிடித்து சட்டிக்குள் போடலாம். சண்டையின் போது உடனே பிடிபட்டுவி்டும்.

இதே போல் அயல்வீட்டுச் சேவல் என்றால் வேலிக்கு அங்காலே நின்று அந்தச் சேவல் கூவும். உடனே இங்காலே நின்று இந்தச் சேவல் தானும் சளைத்தவன் அல்ல என்று ரெக்கை அடித்து கூவும். இரண்டும் கூவி ஒரு கட்டத்தில் வேலி பாய்ந்து சண்டையும் நடக்கும். ஆனால் பெண்களுக்கே உரித்தான ஒரு பிறவிக்குணம் கோழிகளுக்கு உள்ளது. தானாகப் போய் எந்தச் சேவலுடனும் கோழி உறவு கொள்வதில்லை. சேவல் கோழியை உறவு கொள்ள அணுகினாலும் அச்சம், மடம், நானம், பயிற்பு என்பவற்றை சேவலுக்கு எல்லாம் காட்டியே சேவலை உறவு கொள்ளவிடும்.

இங்கே முகப்புத்தகத்தில் வந்துள்ள சில காட்சிகள் தந்துள்ளோம்….. தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த இரு சேவல்கள் தமது எல்லை தாண்டி மாறி மாறி தமக்குள் சண்டை தொடங்கிவிட்டார்கள்……
Image may contain: 2 people, people standing and outdoor

Image may contain: 1 person, standing and outdoor

யாழ் மாவட்ட தேர்தல் தொகுதி வாக்காளர்களே…..!!! என்ன யோசிக்கிறீங்கள்…. அப்போ நாங்கள் என்ன கோழிகளா?? என்று கோபப்படுகின்றீகளா!! ஆனால் ஒன்று இந்தச் சேவல்கள் என்னதான் தமக்குள்ளே அடிபட்டாலும் உங்களை அணைத்தோ அல்லது துரத்தித் துரத்தி கற்பழித்தோ உறவு கொள்வதில்லை…..

நீங்களாகவே போய்………………………. அதுவும் தாய்க்கோழி அதற்கு அப்புறம் குஞ்சு வளர்ந்து குஞ்சுக் கோழி என எல்லாக் கோழிகளையும் இதே சேவல்கள் உறவு கொள்வது என்பது மரபணுப் பிறழ்வை ஏற்படுத்தும்.

 

மருத்துவ விஞ்ஞானம் தொடர்பாக ஒரு விழிப்புணர்வைத் தருகின்றோம்….. தொடர்ந்து உறவுகளுக்குள்ளேயே உறவு வைப்பது குறைபாடான குஞ்சுகள் தோன்றுவதற்கு காரணமாக அமையலாம். ஆகவே ஒரே சேவல்களுக்கு நீங்கள் உடன்படாது தரமான சேவல்களை கண்டு அதன்மூலம் உங்கள் வழித்தோன்றல்களைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த இரு சேவல்கள் போல் தமிழரசுக்கட்சிக்குள் இருக்கும் சில சேவல்களே தொடர்ந்த கோழிகளுடன் உறவு வைத்துக் கொண்டு மற்றைய சேவல்களைக் கொத்திக் கலைக்கின்றார்கள். ஆகவே அந்தச் சேவல்களையும் நீங்கள் அரவணைத்துச் செல்லுங்கள்…. இல்லாதுவிடின் குறைபாடான வழித்தோன்றல்களுடன் நீங்கள் காலத்தை கழிக்க வேண்டி வரலாம்……

இங்கே பாருங்கள்…. உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒருவர்… மாகாணசபை தேர்தலுக்கு ஒருவர் பாராளுமன்ற தேர்தலுக்கு ஒருவர் என ஒரே வீட்டுக்குள் இருக்கும் சேவல்களுக்கே நீங்கள் உங்களுடையதை விட்டுக்கொடுக்கின்றீர்கள்….


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *