சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்தியர்கள் கைகலப்பு! வேடிக்கை பார்த்த ஊழியர்கள்
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் இரண்டு வைத்தியர்கள், வைத்தியசாலைக்குள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இரண்டு நாட்களின் முன்னர் இடம்பெற்றுள்ளது.
குறித்த வைத்தியர்களுக்கு இடையே வைத்தியாலையின் தங்குமிடம் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடே கைகலப்பாக மாறியுள்ளது.
இந்நிலையில் வைத்தியர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டதை, நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் வேடிக்கை பார்த்தனர்.
இதேவேளை, சில மாதங்களின் முன்னர் பெண் பணியாளர்கள் இருவர் சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் தங்குமிடம் தொடர்பாக மல்லுக்கட்டியிருந்த நிலையில், அவர்களில் ஒருவரை மாத்திரம் மனநல பரிசோதனைக்கு, வைத்தியசாலை பொறுப்பதிகாரி அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.