வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகர் கவனத்திற்கு

உடுவில் பிரதேச செயலகர் பிரிவின் கீழ் உள்ள கற்பவதிகளுக்கான சத்துணவு உதவித்தொகை இரண்டாயிரம் ரூபா பெறுமதியான கூப்பன் உதவி அரசாங்க அதிபர் செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது இதற்கான சத்துணவுப்பொருட்களை சுன்னாகம் சந்தியில் அமைந்திருக்கும் புகழ் களஞ்சியம் எனும் வியாபார நிலையத்தில் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது

ஆனால் பயனாளிகள் கூப்பனைக்கொண்டு மேற்படி கடைக்குச்சென்றால் கடை உரிமையாளர் மற்றும் பணியாளர்களின் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

இவர்கள் நீண்டநேரம் கடையில் காத்திருக்க வேண்டியுள்ளது காசுக்கு பொருட்களை வாங்குபவர்கள் வந்த வண்ணம் இருந்தால் அவர்களுக்கு பொருட்கள் வழங்கி முடியும் வரை கற்பவதிகள் காத்திருக்க வேண்டியுள்ளது

அத்தோடு சத்துணவுக்காக வழங்கப்படும் கூப்பனுக்கு சவர்க்காரம் சம்போ சலவைத்தூள் போன்றவற்றையே வாங்க முடிகின்றது

தானிய வகைகள் இருந்தாலும் இல்லை என்கிறார்கள் முட்டை இருந்தும் அது ஓடர் முட்டை என்கிறார்கள்

எண்ணெய் வகைகள் தர மறுக்கிறார்கள் கூப்பனுடன் செல்பவர்களை கீழ்த்தனமாக நடத்துகிறார்கள் என பயனாளிகள் கூறியுள்ளார்கள்

இது தொடர்பாக அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்தும் எந்த நடவடிகையும் இல்லை என்றும் புகழ் களஞ்சியத்தினருக்கும் அலுவலகர்களுக்கும் இடையில் எதோ வியாபார நோக்கம் உள்ளது என்றும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி
பாதிக்கப்பட்ட மக்கள்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *