விளையாடச் சென்ற சிறுமியை அலங்கோலப்படுத்திய யாழ் முதல்வர் சினேக்பாபு!! (Photos)

சினேக்பாபு என யாழ் மாநகர மக்களால் அழைக்கப்படும் யாழ் மாநகரசபை முதல்வர் ஆனோல்டின் அலங்கோல நடவடிக்கையால் விளையாடச் சென்ற சிறுமி படுகாயங்களுக்கு உள்ளானார். சினேக்பாபுவும் அவரது சீடர்களும் அவருக்கு பணிவிடை செய்யும் ஒரு அதிகாரியினதும் கேவலங்களால் மாநகரசபை வீதிகள் போல் நாற்றம் எடுக்கின்றன. குப்பைகளை எவ்வாறு அகற்றுவது என்று சிந்திக்காது யாழ் மாநகரசபை ஊழியர்களை கோட்டு, ரை, சப்பாத்து கட்டி வந்தால் காணும் என நினைக்கும் நிலையில் சினேக்பாபு செயற்பட்டு வருகின்றார். அண்மையில் யாழ் மாநகரசபையின் நாற்றத்தை பொலிசாரே சீர்செய்த கதை அனைவரும் அறிந்ததே. பொலிசாரால் யாழ் மாநகரசபை பிரதேசசுற்றாடல் கழிவுகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கும் போது சினேக்பாபு வெளிநாட்டு சேட்டு வேட்டியுடன் போய் போட்டோவுக்கு போஸ்ட் கொடுப்பதற்காக குப்பை அகற்றிய விதத்தைப் பார்த்த மக்கள் சமூகவலைத்தளங்களில் பல்வேறு வகையான நையாண்டிகளை சினேக்பாபு மீது தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் யாழ்.மாநகர சபைக்கு சொந்தமான பழைய பூங்கா எந்த வித புனரமைப்பும் செய்யாமல்
அழிவடைந்து செல்கிறது. முன்னால் ஆளுநர் சந்திரசிறியின் நிறைந்த மனத்தில் உதித்த இந்த பூங்காவானது தற்போது சினேக் பாபுவால் சீரழிக்கப்படுகின்றது. அங்கு பல விளையாட்டு உபகரணங்கள் பழுது அடைந்து குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. நேற்றைய தினம் அதில் உள்ள குறைபாடினை அறியாத ஒரு சிறுமி விழுந்து தலையிலும் காலிலும் காயம் ஏற்பட்டது.

நாட்டை மிகவும் துரிதகதியில் மீள்நிர்மாணம் செய்வதற்கு இலங்கை ஜனாதிபதி கோத்தபாய முயற்சி செய்து கொண்டிருக்கும் போது சினேக்பாபு இவ்வாறு அசண்டையீனமாக இருந்து எங்கு லஞ்சம் வாங்கலாம், காசு அடிக்கலாம் என்பதிலேயே குறியாகத் திரிவதாக யாழ் மாநகரசபை வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. சினேக்பாபுவின் பிள்ளைகளுக்கோ அல்லது அவரது அல்லக்கைகளான அதிகாரிகளின் பிள்ளைகளுக்கோ காயப்பட்ட பிள்ளையின் நிலை வந்திருந்தால் அவர்கள் எவ்வாறான நடவடிக்கை எடுத்திருப்பார்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.

வடக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த போது இந்தியா சென்ற சினேக்பாபு விமானத்துக்குள் செய்த திருவிளையாடல்கள் என்ன என்பதை சந்தர்ப்பம் வரும்போது தருகின்றோம்.

இதே வேளை சினேக்பாபுவுக்கு ஜல்றா போட்டு அவரது செயல் அதிகாரி ஒருவர் செய்யும் விளையாட்டுக்களும் சந்தர்ப்பம் வரும்போது இங்கு பிரசுரிக்கப்படும்.

 

Image may contain: outdoor

Image may contain: one or more people, people standing and outdoor

Image may contain: plant and outdoor

Image may contain: one or more people and close-upImage may contain: outdoorNo photo description available.Image may contain: plant, outdoor, water and natureImage may contain: people sitting, outdoor, nature and waterImage may contain: grass, outdoor and natureImage may contain: people sitting

Image may contain: people sittingImage may contain: people sitting, tree, table, plant, grass, outdoor and natureImage may contain: grass, outdoor and natureImage may contain: one or more people, tree, plant, outdoor and natureImage may contain: outdoorImage may contain: tree, plant, sky, grass, outdoor and natureImage may contain: people sitting, plant, tree, table, outdoor and natureImage may contain: tree, plant and outdoorImage may contain: outdoorImage may contain: outdoorImage may contain: outdoor


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *