மரண தண்டனை நிறைவேற்றும் மாடு ஏ 9 வீதியில் நேரடியான திகில் காட்சி!

உயிரை பறிப்பவன் எமன். எமனின் வாகனம் எருமை மாடு. இன்று அதிகாலை வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அப்பாவி தமிழ் இளைஞர்கள் இருவர் மீது மாடு ஒன்று நடத்திய மரண வெறி தாக்குதலில் ஒரு இளைஞன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

வத்தளையை சேர்ந்த 21 வயது உடைய கிருபாகரன் துஷியந்தன் என்பவரே சம்பவத்தில் பரிதாப மரணம் அடைந்தவர். இவரின் நண்பர் ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்து வவுனியா போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கண் இமைக்கின்ற நேரத்துக்குள் எதிர்பார்த்து இராத விதமாக இவ்விபத்து நடந்தேறியது. அத்தருணம் ஏ 9 வீதியில் பயணித்த பஸ் வண்டியின் கண்காணிப்பு கமராவில் இக்கோர விபத்தின் திகில் காட்சிகள் பதிவாகி உள்ளன.

எமலோகத்துக்கு அனுப்பும் மாடுஏ 9 வீதியில் நடமாட்டம்

Posted by NewJaffna on Isnin, 2 Disember 2019

மாடுகள் போன்ற கால்நடைகளை கட்டாக்காலிகளாக வீதிகளில் அலைய விடுவதும், அதன் மூலமாக பொதுமக்களின் பயணத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் சட்ட படியான குற்றங்கள் ஆகும். ஆனால் எப்பொழுதும் பிஸியாக காணப்படுகின்ற ஏ வீதியில் கட்டாக்காலி மாடுகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

இம்மாடுகளின் உரிமையாளர்கள் மீது உச்ச பட்ச நடவடிக்கையை சட்டம் எடுத்தல் வேண்டும். கூடுதல் தண்ட பணத்தை அவர்களிடம் இருந்து அறவிட வேண்டும். மாடுகளை பறித்து அரச உடைமை ஆக்குதல் வேண்டும். மாடுகளை அவர்கள் வளர்க்க முடியாது என்று தடை விதித்தல் வேண்டும். உரிமை கோரப்படாத மாடுகளை அவற்றை முறையாக வளர்க்க கூடிய வறிய குடும்பங்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் வழங்கி வைக்கலாம்.

புதிய அரசாங்கம் இவ்விடயத்தில் உரிய கவனம் எடுத்து இது போன்ற சம்பவங்கள் இனியும் நேராமல் உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த அரசாங்கமும் சரி, தமிழ் தலைவர்களும் சரி ஏற்கனவே உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அநியாய சாவு இடம்பெறாமல் தடுத்திருக்க முடியும் என்றும் ஆதங்கப்படுகின்றனர்.

 

 

 

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *