தொண்டைமானாறு கடல்நீரேரியின் வான் கதவுகள் திறப்பு

யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைகாரணமாக, தொண்டைமானாறு கடல்நீரேரியின் வான் கதவுகள்இன்று திறக்கப்பட்டன.

அச்சுவேலி – இடைக்காட்டு பகுதியூடாக தொண்டைமானாறு வீதியில் வெள்ளம்பாயலாம் எனும்அபாயத்தால் குறித்தவான்கதவுகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.

வான் கதவை யாழ்.மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் சர்வராஜா உள்ளிட்ட குழுவினர் திறந்துவைத்தனர்.

அத்துடன், தொண்டைமானாறு கடற்பகுதியில் வெள்ளம்பாய்ந்து ஓடுவதற்கான முனைபிரதேசம், தொண்டைமானாறு அக்கறைபிரதேச மக்களால் கால்வாயாக வெட்டிவிடப்பட்டுள்ளதாகமேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *