கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் வெளிநாட்டவர்கள்!

தமிழர் தாயகம் எங்கும் இன்று மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வுகள் மிக எழுச்சியுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.

தாயகத்தின் பல இடங்களிலும் உறவுகளை இழந்த உறவுகள் மாவீரர்களை நினைவுகூருகின்ற நிலையில் ,கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்திலும் இன்று உணர்வெழுச்சியுடன் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டனர்.

இன்று காலையிலேயே துயிலுமில்ல ஏற்பாட்டு பணிகள் யாவும் பூர்த்தியாகியிருந்தது.

இந்நிலையில், இன்று பகல் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கனகபுரம் துயிலுமில்லத்திற்கு வந்ததை அவதானிக்க முடிந்தது.

அத்துடன் துயிலுமில்ல பணிகளில் இருந்தவர்களிடம் மாவீரர் தினம் உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் அவர்கள் ஆர்வமாக கேட்டறிந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *