வவுனியாவில் வீடு புகுந்து தாக்குதல்: இருவர் படுகாயம்

வவுனியாவில் உள்ள வீடொன்றின் மீது அடையாளந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா – ஓயார்சின்னக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீ்ட்டின் ஜன்னல், கதவு என்பன சேதமாக்கப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்த இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்தவர்கள் 73 வயதுடைய திருச்செல்வம் மற்றும் 60 வயதுடைய கலா எனத் தெரியவருகின்றது.

இவர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *