கொலைக்களம் – 02 திரைப்படம் விரைவில்?

மனிதாபிமானத்துக்கு எதிராக சவால் விடுகின்ற இந்த புகைப்படங்களை பாருங்கள். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸா நடத்திய வகை தொகை அற்ற படுகொலைகளுக்கான சில சாட்சியங்கள் இவை. ஆனால் இந்த பிரேமதாஸாவின் மகனான சஜித் பிரேமதாஸா தந்தையின் ஆட்சியை அப்படியே மீண்டும் கொண்டு வர போவதாக சொல்லி அடிக்கடி நினைவூட்டி வருகின்றார்.

அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்று அவர் தன்னை தானே சொல்கின்றார். தகப்பன் எட்டடி பாய்ந்தால் இவர் பதினாறு அடி பாய்வார் என்று விளங்குகின்றது. இவர் ஒரு வேளை ஜனாதிபதியாக வந்து விட்டால் நாடே ஒரு கொலைக்களம் ஆகி விடும் போலும். பழி வாங்கலுக்கு பெயர் போன ரணசிங்க பிரேமதாஸவின் மகனான சஜித் பிரேமதாஸ தகப்பனை புலிகள் படுகொலை செய்தமைக்கு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அழிக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

புலிகளால் சுடப்பட்டவர்களின் குடும்பங்களை துரோகிகள் குடும்பம் என்று ஒதுக்கி நடக்கின்ற பாரம்பரியம் தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்துக்காக தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு பிச்சை கேட்டு வந்திருக்கின்றது.

சட்டத்துக்கும் நீதிக்குமான சுயாதீன அமைப்பு வெளியிட்ட ஊடக அறிகை மேற்கண்டவாறு கூறுகின்றது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *