யாழில் உண்டியல் பணம் எடுக்க சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

யாழ்ப்பாணத்தில் உண்டியலில் வந்த பணத்தை எடுக்க சென்ற வாடிக்கையாளர் ஒருவரை வர்த்தக நிலையம் ஒன்று அவமதித்த விடயம் சமூக வலைத்தளங்களில் பரவலாகியுள்ளது.

யாழ் நகரத்தில் இஅயங்கும் நகைக்கடை ஒன்றே இவ்வாறு வாடிக்கையாளருடன் அநாகரிகமாக நடந்துள்ளதாக பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

பணத்தை பெற சென்றவரிடம், வெளியில் சென்று காலணியை கழற்றிவிட்டு வருமாறு கடையிலிருந்தவர் கூறியுள்ளார்.

எனினும் பணத்தை பெற சென்றவர்,இது வாடிக்கையாளரை அவமதிக்கும் செயல் என குறிப்பிட்டு விட்டு, வெளியில் சென்று காலணியை கழற்றி வைத்துவிட்டு மீண்டும் உள்ளே அமர்ந்துள்ளார்.

இதனையடுத்து கடைக்காரர்கள், அங்கிருந்த காசளரிடம் இவரை திருப்பி அனுப்பி விடுங்கள். இவருக்கு பணம் கொடுக்க முடியாது என தெரிவித்ததோடு அவரை அங்கிருந்து விரட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கவலையடைந்த குறித்த நபர் இதனை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

 

இதனையடுத்து வாடிக்கையாளர்களுடன் எப்படி நடப்பது என்ற அடிப்படை அறிவுமில்லாமல், அராஜகமாக நடந்து கொண்ட அந்த வர்த்தக நிலையத்தின் மீது சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் வெளியிடப்பட்டு வருகின்றது.

இதேவேளை வெளிநாடுகளில் குறிப்பாக தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பொருளை வாங்கும் முன்னரும் , அதனை வாங்கிய பின்னரும் வாடிக்கையாரை வணங்கும் முறை உண்டு என்றும் முகநூல் வாசிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *