யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பலர் வைத்தியசாலையில் அனுமதி

தற்போது யாழ்ப்பாணத்தில் பெய்து வரும் பருவ மழைகாரணமாக யாழ் பல்கலைக்கழக விரிவுரை மண்டபங்கள், மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் யாழ்பல்கலைககழக வளாகங்களில் அதிகளவான நுளம்பு பெருக்கியுள்ளது.

இதன் காரணமாகப் பல மாணவர்கள் நுளம்புக்கடிக்கு இலக்காகி டெங்கு நோய்க்குள்ளாகிய நிலையில் பலர் வைத்தியசாலையில்அனுமதிகபட்டுள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு மாணவர்கள் அறிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாணவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை யாழ் பல்கலைக்கழகத்தில் அதிகளவான மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எமக்கு உத்தியபூர்வமாக எந்தவிதமான தகவலும் கிடைக்க வில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி க.கந்தசாமியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்கலைகழகத்தில் டெங்குகாய்ச்சல் பரவல் தொடர்பாகக் கடந்த வாரம் சுகாதர உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடியதாகவும் அப்போது இரு மாணவர்கள் மாத்திரமே டெங்குகாய்ச்சலால் பாதிப்படைந்தமை தெரியவந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில் யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து 20 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் டெங்கு காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைகளைப் பெற்று வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

அத்துடன் யாழ். மாவட்டத்திலே இந்தவருடம் மாத்திரம் 1991 பேர் டெங்குகாய்ச்சலுக்கு இலக்காகி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 456 பேர் டெங்கினால் பாதிக்கப்ட்டதோடு , கடந்த எட்டு நாட்களில் மாத்திரம் 276 பேர் டெங்கு காணமாகச் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *