யாழ் நகரில் வைத்தியரின் வீட்டுக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்

யாழ்.நகரில் உள்ள சித்த மருத்துவர் ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்த ரவுடி கும்பல் வீட்டை அடித்து நொருக்கி வாகனம் ஒன்றையும் எரித்துள்ளனர்.

குறித்த வீட்டின் வைத்தியரும் குடும்பத்தவர்களும் பணி நிமித்தம் கொழும்பு சென்றுள்ளனர் அவ்வாறு சென்ற நிலையில் உறவினர்கள் மாலை 6 மணியளவில் உறவினர் ஒருவர்

வீட்டினை மேற்பார்வை செய்ய சென்றுள்ளார். இதன்போது வீட்டில் இருந்து நெருப்பு எரிவதனை அவதானித்த அவர் அயலவர்கள் தீ அணைப்பு சேவைக்கு சுமார் 10மணியளவில் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனால் 10.15 மணியளவில் குறித்த வீட்டினையடைந்த தீ அணைப்பு பிரிவினர் நீண்ட முயற்சியில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டினை சோதனையிட்ட சமயம்

வீட்டின் முன் கதவு உட்பட சகல அறை கதவுகளும் உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த கட்டில்கள் , அலுமாரிகள் , தொலைக்காட்சிப் பெட்டி , கணனி மற்றும் தளபாடம் அனைத்தும் கொத்தி சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறித்த சம்பவத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளமை அவதானிக்க முடிவதோடு குறித்த வன் செயல் காரணமாக குறித்த வீட்டிற்கு 25 லச்சத்திற்கும் மேற்பட்ட சேதம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *