யாழில் நுளம்பு ஏற்றுமதி! சுகாதாரத் திணைக்களத்திற்கு வேண்டுகோள்

யாழ்ப்பாணத்திற்கு உள் வருகின்ற புகையிரதங்களில் இலட்சம் கணக்கிலான நுளம்புகள் இடம்மாற்றப்படுகின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார திணைக்களத்திற்கு முகநூலில் சமூக ஆர்வலர் ஒரு குறித்த பதிவினை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து கூறுகையில், யாழ்ப்பாணத்திற்கு வருகின்ற புகையிரத்தில் நுளம்புகள் அதிகளவில் இருப்பதால் பயணிகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் சில காலமாக பல நோய்கள் நுளம்பினால் வருவதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

மேலும் நுளம்பினால் சிறு சிறு குழ்ந்தைகளின் உயிரிழக்கும் அபாயம் காணப்படுகின்றன.

இதனால் சுகாதாரத் திணைக்களம் இதற்கு உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *