செருப்படிக்கு பயந்து சஜித்தை காட்டி கொடுத்த விஜயகலா!

கடவுள் எப்பொழுது நினைக்கின்றாரோ அப்பொழுதுதான் தமிழ் மக்களுக்கு தீர்வு வரும் என்று திருவாய் மலர்ந்து உள்ளார் இராஜாங்க அமைச்சர் விஜயகலா.

தமிழ் மக்களுக்கு நல்ல அரசியல் தலைமைதான் தேவையே ஒழிய இவரை போன்ற ஆசாடபூதிகள் தேவையே இல்லை. அரசியல்வாதிகள் என்று சொல்லி கொள்கின்ற இவரை போன்றவர்கள் ஆன்மீகம் பேசினால் இருக்க வேண்டிய இடமே வேறு.

தமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா எப்போதோ சொன்னார். அதைத்தான் அம்மணி உதயன் பத்திரிகைக்கு பேட்டி கொடுப்பதற்காக பொறுக்கி படித்து எடுத்தபோது அந்த வசனத்தை சற்று மாற்றி இவ்வாறு சொல்லி இருக்கின்றார்.

கடவுள்தான் தமிழ் மக்களுக்கு தீர்வை தர வேண்டும் என்றால் இவர் பாராளுமன்றத்தில் எதற்கு? இவருக்கு அரை அமைச்சர் பதவியும் எதற்கு? தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகளும் எதற்கு? ஆயினும் அம்மா சும்மா சொன்னாலும் உதிர்த்த வசனத்தில் பல அர்த்தங்கள் இருக்கின்றன.

ஐக்கிய தேசிய கட்சியோ, ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித்தோ தீர்வை தர போவதில்லை என்பது இவருக்கு நன்றாக தெரியும். சம்பந்தர் மீது நடத்தப்பட்ட செருப்படி தாக்குதலால் பயந்து போய் விட்டார். சஜித்துக்காக மேடைகளில் ஏறி பொய் சொன்னால் விளக்குமாறு அடிகூட விழும் என்று கலாவுக்கு விளங்கி விட்டது.

அதனால்தான் எதையாவது சொல்லி தப்ப வேண்டும் என்பதற்காக கடவுளை இழுத்து கதை அளந்து உள்ளார்.கடவுள் நினைத்தால்தான் தமிழ் மக்களுக்கு தீர்வு வரும் என்றால் சஜித் பிறேமதாஸ தீர்வை தருவார் என்று நம்ப வேண்டாம் மக்களே என்கிற செய்தி அவரின் வசனத்தில் ஒளிந்து உள்ளது. அவருக்கு வாக்களித்து தீர்வு வர போவதில்லை என்று உணர்த்தப்பட்டு உள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தரப்பில் தீர்வை தருவதற்கு எவரும் இல்லை என்பதால்தான் இவர் கடவுளை இழுத்து இருக்கின்றார். ஆகவே இவர்களின் வேட்பாளராக கடவுள்தான் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும். கடவுளை தவிர வேறு எவருக்கும் இவரின் தரப்பில் வாக்களிக்கவே முடியாது.

எனவே சஜித்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று இவர் மறைமுகமாக சொல்லி இருக்கின்றார். அட கடவுளே… இவரிடம் இருந்து சஜித்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தமிழ் மக்களே விழித்து கொள்ளுங்கள்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *