வடமாகாணத்தில் டெங்குநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை

வடமாகாணத்தில் டெங்குநோய் தாக்கத்தினை கட்டுப்படுத்தல் தொடர்பாக விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஆளுநர் செயலகத்தில் இன்று முற்பகல் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் பணிப்புரைக்கு அமைவாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வடமாகணத்தில் டெங்கு தாக்கத்தினால் 2017ஆம் ஆண்டு 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2018ஆம் ஆண்டு 4 ஆக குறைவடைந்துள்ளது. 2019 டெங்கு தாக்கத்தினாலான இறப்பு பூச்சியமாக காணப்படுகின்றது.

இதன்போது டெங்கு பரவலை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான கூட்டம் ஒவ்வொரு வாரமும் பிரதேச செயலக ரீதியாகவும், ஒவ்வொரு மாதமும் மாவட்ட செயலக ரீதியாகவும் மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழான மன்றங்கள் மற்றும் சபைகள் அவர்களுடன் இணைந்து டெங்கு தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலின் போது வடமாகாண சுகாதார சுதேச வைத்திய நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் பதில் செயலாளர் கே.தெய்வேந்திரம், வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிராந்திய பணிப்பாளர்கள், வடமாகாண சிரேஷ்ட பொது சுகாதார அதிகாரி, யாழ்.மாவட்ட பொதுசுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *