ரணில் குள்ள நரி, ராஜபக்ஸ பரவாயில்லை அன்ரன் பாலசிங்கம் தீர்க்கதரிசனம் (வீடியோ)

ரணில் ஒரு குள்ள நரி, மஹிந்த பரவாயில்லை என்று தெரிவித்து உள்ளார் புலிகளின் அரசியல் ஆலோகராக இருந்த அன்ரன் பாலசிங்கம்.

தலைவர் பிரபாகரனுக்கும் ரணில் ஒரு குள்ள நரி என்பது நன்றாக தெரிந்து இருந்தது என்றும் பாலசிங்கம் சொல்லி உள்ளார்.

தீர்வு திட்டம் என்று போனதுதான். அங்கு எதுவுமே நடக்கவில்லை, உலக நாடுகளை பிடித்து புலிகளை வளைத்து போடுகிற வேலையைத்தான் ரணில் பார்த்தார் என்றும் தெரிவித்துள்ள அவர் அதனால்தான் 2005 ஆம் ஆண்டு ரணிலுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காமல் புலிகள் பார்த்து கொண்டனர் என்று குறிப்பிட்டு உள்ளார். தீர்வை தராமல் இழுத்தடித்து கொண்டே இருப்பார்கள் என்றார்.

நரியன் ரணில் பற்றி கலாநிதி அன்டன் பாலசிங்கம் ………

Posted by Maran Suganthi on Isnin, 4 November 2019

கருணா போன்றவர்களுக்கு வெளிநாட்டு ஹோட்டல்ல்களில் வைத்து மதுவும், மங்கையும் கொடுத்தது ரணில் கம்பனிதான். கருணாவை பிரித்தது நாங்கள்தான் என்று இதை ஒரு முறை ஊடகங்களுக்கு ரணில் சொல்லியும் இருந்தார்.

கருணாவை புலிகளிடம் இருந்து தப்புவிப்பதற்காக அமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் வாகனத்தில் கொழும்புக்கு கொண்டு வர செய்தவரும் ரணில்தான்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *