நடிகர் திலகம் சிவாஜிஅனுப்பிய விவாகரத்து கடிதம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக மீன் சின்னத்தில் போட்டியிடுகிற எம். கே. சிவாஜிலிங்கம் ரெலோ கட்சியில் இருந்து சம்பிரதாயபுர்வமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை விலகினார்.

இவர் ரெலோ கட்சியின் அடிப்படை உரிமையில் இருந்தும், இக்கட்சி மூலமாக பெற்ற பதவிகள் அனைத்தும் இருந்து விலகுவதாக ரெலோ செயலாளர் நாயகம் என். ஸ்ரீகாந்தாவுக்கு கைப்பட எழுதி அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

இவர் இத்தேர்தலில் போட்டியிடுவது போலவே இவரின் இந்த இராஜினாமாவும் தமிழ் மக்களுக்கு எந்த பலனையும் பெற்று கொடுக்க போவதில்லை.

தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்த முன்னர் அனுப்பி இருக்க வேண்டிய இராஜினாமா கடிதத்தை இவர் இப்போது அனுப்பி இருப்பதால் ரெலோவில் இவர் பெயர் சுத்தப்பட போவதும் இல்லை.

நடிகர் திலகமான சிவாஜிக்கு மக்கள் திலகமாக மாற வேண்டும் என்றெல்லாம் எண்ணம் கிடையாது. ஆனால் இவரை யாரோ இயக்க மகா நடிகராக இவர் நடித்து கொண்டு இருக்கின்றார் என்பது மாத்திரம் வெளிப்படை ஆகும்.

ரெலோ உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற சிறிய சில்லறை கட்சிகளில் ஆர் விலகினாலும் சரி, ஆர் சேர்ந்தாலும் சரி தமிழ் மக்களுக்கு அக்கறையே கிடையாது. இந்த உதிரி கட்சிகள் கூட்டமைப்பை விட்டு விலகி சொந்தமாக தேர்தல் கேட்டால் அம்போதான். அதனால் சம்பந்தரின் கோவணத்தை இழுத்து பிடித்து கொண்டிருக்கின்றனர். ஆனால் வயது போன காலத்தில் சம்பந்தரின் கோவணம் எப்போது இவர்களால் அவிழ்ந்து விட போகிறதோ தெரியவில்லை.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *