யாழில் தயார் நிலையில் கோட்டாவின் விசேட அதிரடி படை

வருகின்ற ஜனாதிபதி தேர்தல் தினத்தில் யாழில் அதிரடி தாக்குதல் நடத்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளரும், இந்நாள் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாவின் விசேட படையணி ஒன்று தயார் நிலையில் காத்திருக்கின்றது.

அதற்காக இது ஒன்றும் கோட்டா தயார்ப்படுத்திய படை அணி அல்ல. கோட்டாவுடன் அதுவாகவே வந்து சேர்ந்த படையணி. கோட்டாவுக்கு பாரிய வெற்றியை ஏற்படுத்தி கொடுக்க களத்தில் குதித்து உள்ளது.

இவர்கள் யாழ்ப்பாணம் எங்கும் ஆழ ஊடுருவி காணப்படுகின்றனர். கோட்டா கண் அசைத்தால் போதும். இவர்கள் கை அசைத்து விடுவார்கள். அவ்வளவுதான். ஜூனியர் பிறேமதாஸ காலி.

கடந்த நான்கரை வருட ஆட்சிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறுகிய சுய இலாப அரசியலுக்கும் எதிரான புரட்சி படையாக எழுச்சி பெற்றவர்கள்தான் இவர்கள். இன்னொரு வகையில் சொன்னால் தமிழ் தேசிய கூட்டமைப்புதான் இந்த படை பிரிவு உருவாக காரணம். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தொடர்ந்தேச்சையாக தமிழ் மக்களுக்கு வழங்கி வந்திருக்கின்ற எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி கொடுக்ககூட எத்தனிக்கவில்லை.

இதனால் இவர்கள் குறித்து பாரிய அச்சத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறைந்து போய் காணப்படுகின்றது. இ இவர்கள் எந்த ஆயுதத்தாலும் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலான் என்று தெரிகின்றது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுகூட தும்புத்தடியால்கூட தாக்குதல் நடத்தப்பட கூடும், கவனமாக இருங்கள் என்று கூட்டமைப்பினர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *