பெட்டை கோழியாக மாறி ஒரு முட்டையை போட்ட அங்கயன்

மைத்திரிக்கு தலையையும், மஹிந்தவுக்கு வாலையும் காட்டி கொண்டு அரசியல் செய்பவர் அங்கயன் இராமநாதன். பொது தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். பின்னர் தேசிய பட்டியல் மூலமாக பின் கதவால் பாராளுமன்றம் சென்றவர். நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக இருந்து இவர் செய்து கிழித்தது என்ன? என்று மக்கள் கேட்கின்றனர்.

இவர் மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவை ஆதரித்து வெளியிட்ட துண்டு பிரசுரம் ரொம்பவே மொக்கையானதாக உள்ளது. ராஜபக்ஸக்கள் செய்த, செய்ய போகின்ற மக்கள் சேவைகளை முன்னிலைப்படுத்தி வாக்கு கேட்பதற்கு பதிலாக அதில் சுய புரணம் பாடி இருக்கின்றார்.

  1. இவரை மக்களிடம் இருந்து பிரிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சதி செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்ததாம். இவருடன் மக்கள் எங்கு ஐயா சேர்ந்து இருக்கின்றார்கள்? அவ்வாறு சேர்ந்து இருந்திருந்தால் பின் கதவால் பாராளுமன்றம் போயிருக்க மாட்டார்.
  2. இவருடைய கட்சியின் தலைவர்தான் ஜனாதிபதியாக இருக்கின்றார். அவரை கொண்டு இவர் தமிழ் மக்களுக்கு என்ன செய்து கொடுத்து உள்ளார்? என்று பார்த்தால் ஒன்றுமே இல்லை. ஆனால் வர போகின்ற ஜனாதிபதியை கொண்டு தமிழ் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அண்ணன் சிந்தித்தாராம்.. அதை கொண்டு போய் கோத்தாவுக்கு கொடுத்தாராம், கோத்தாவுக்கு அதை பார்த்து படித்து ஓகே சொல்லத்தான் நேரமாக இருந்ததாம்.
  3. அமைய போகின்ற ஆட்சி தமிழர்களை உள்ளடக்கியதாக அமைய வேண்டுமாம். பெருந்தேசிய கட்சிகளின் அரசாங்கங்களில் எத்தனையோ தமிழர்கள் அமைச்சர்களாக இருந்து வந்திருக்கின்றனர். தனக்கு அமைச்சு பதவி வேண்டும் என்பதையே இப்படியாக கேட்டு இருக்கிறான் இந்த குறுக்காலே போவான்.
  4. போதை பொருள் பாவனை, சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு யார் பொறுப்பு? என்று கேட்க கூடாதாம் என்கிறான் இந்த பாவி. வடக்கு மண் துரித மீள் எழுச்சி அடைந்தால் ஒரே தீர்வு எல்லாவற்றுக்கும் கிடைத்து விடுமாம்.
  5. அரசியல் கைதிகளை விடுவிக்க சொல்லி தமிழ் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்களால் கொடுக்க முடியாத அழுத்தத்தை தனியொருவராக இவர் ஜனாதிபதி மைத்திரிக்கு கொடுத்தாராம். ஆனால் அந்த கைதிகள் எல்லோரும் இப்போதும் சிறைக்குள்ளேதானே இருக்கின்றார்கள் அண்ணர்?
  6. யாழ்ப்பாணத்தில் மக்களின் காணிகள் மக்களுக்கு விடுவித்து கொடுக்கப்பட்டது இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் இதயபூர்வமான சேவை மூலமாக மாத்திரமே. காணி கையளிப்பு விழாவுக்கு வந்து படம் பிடித்து படம் காட்டி சென்றது மாத்திரமே அங்கயன் செய்தது. மற்றப்படி காணிகள் விடுவிப்புக்கும், இவருக்கும் எந்த சம்பந்தமே கிடையாது.
  7. அனைவருக்கும் சமமாக இடம் அளித்து வடக்கு மண்ணை துரித வளர்ச்சி அடைய செய்ய வேண்டுமாம். இவர் மற்றவர்களுக்கு எங்கே இடம் கொடுக்கின்றார்? டக்ளஸ் தேவானந்தாவுக்கே ஆப்பு வைக்க பார்த்தவர். அகிலதாஸுக்கு துவக்கு காட்டியவர். அண்மையில் மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாணம் வந்தபோது மகேஸ்வரி நிதியம் ரஜீவை நாசுக்காக பின்னுக்கு தள்ளி தள்ளி மஹிந்தவுக்கு போய் நின்ற கெட்டிக்காரன் இவர். அப்பனுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை.
  8. ஒரு முட்டை போடுகிற கோழி கொக்கரிக்கும் என்பதற்கு அங்கயன் உதாரணம். ஆயிரம் முட்டை போடுகிற ஆமை சத்தம் போடாமல் இருக்கும் என்பதற்கு டக்ளஸ் தேவானந்தா நல்ல உதாரணம். மொட்டு அரசாங்கத்தில் அவர்தான் தமிழ் தலைமை அமைச்சராக இருப்பார். அங்கயன் எல்லாம் அன்னக்கைதான்
  9. ஆனால் தமிழ் மக்கள் கோத்தாவையும், மஹிந்தவையும் நம்பி தாரளமாக வாக்களிக்கலாம். அவர்கள் உண்மையாகவே வடக்கு தேசத்தை சொர்க்கபுரியாக மாற்றுவார்கள். அதே நேரத்தில் அபிவிருத்தி என்கிற பெயரில் நிதி கொளை, வேலை வாய்ப்பு மோசடி, கட்டை பஞ்சாயத்து, ரவுடிசம் போன்றவற்றின் மொத்த உருவமாக இருக்கின்ற அங்கயனை வைத்திருக்க வேண்டிய இடத்தில் வைத்திருப்பார்கள்.

அங்கயனின் சிறுபிள்ளை அரசியல்…. ஆதாரம் இதோ…

மற்றவர்களுக்கு இடம் கொடாமல் அவர்களின் இடத்தினை முட்டி மோதி பின்னுக்குத் தள்ளி தன்னை முன்னிலைப்படுத்தும் கேவலவாதியின் செயல் ஆதாரபூர்வமாக…

හිටපු ජනාධිපති ගරු මහින්ද රාජපක්ෂ මහතා සමඟ යාපනයේ පැවති මහා ප්‍රසිද්ධ රැස්වීමකට සහභාගී වීම…தற்போது யாழ்ப்பாணத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன்….

Posted by Rishi Senthil Raj on Isnin, 28 Oktober 2019


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *