யாழில் இன்று 5 கட்சி கூட்டம்- விக்னேஸ்வரன் தரப்பு கலந்து கொள்ளுமா?

நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின் பின்னர், இரண்டு வேறுபட்ட அறிக்கைகள் வரஇருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதன்படி, 5 கட்சிகளிற்குள் இணக்கப்பாடு எட்டப்பட முன்னரே நேற்று தமிழ் மக்கள் கூட்டணியின் நிலைப்பாட்டு அறிக்கை வெளியாகியதோடு, அதில் மக்கள் தாங்கள் விரும்பியவர்களிற்கு வாக்களிக்கலாமெனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

5 கட்சிகள் இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு முன்னரே விக்னேஸ்வரன் தரப்பு தமது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதால், இன்றைய கூட்டத்திற்கு அவர்கள் வருவதற்கான வாய்ப்பில்லையென்றே தெரிகிறது.

இந்த நிலையில் ஏனைய 4 கட்சிகளும் கலந்துரையாடலில் பங்குபற்றும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு முதல் வாக்கை இடலாம், பிரதான வேட்பாளர்களை ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளது. ஆனால் இதற்கு நேர்மாறான நிலைப்பாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 3 கட்சிகளும் உள்ளன. ரெலோவின் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான ஒருவரை ஆதரிக்க முடியாதென்பது அந்த கட்சிகளின் நிலைப்பாடாக காணப்படுகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *