ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

ஜனாதிபதி வேட்பாளர்களான கோத்தாபய மற்றும் சஜித் பிறேமதாசவின் வாக்குகளை புறக்கணிப்போம் என தெரிவித்து தாயகத்தில் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம், வவுனியா நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது.978 வது நாளாக காணாமல்போன உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அத்துடன், இரண்டு பிரதான வேட்பாளர்கள் மீதும் முன்வைக்கப்படும் குற்றசாட்டுக்களான, போர்க்குற்றச்சாட்டு மற்றும் சிங்கள பௌத்த, ஒற்றையாட்சிக் கொள்கை போன்ற குற்றச்சாட்டுக்கள் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *