யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபரொருவர் உயிரிழப்பு”

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மோதி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

புகையிரதம் வவுனியா – புளியங்குளம், பரிசன்குளம் புகையிரதக்கடவையில் பயணித்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசித்து வந்த விக்கினன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *