தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் கொழும்பில் நேற்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நீண்ட நேரம் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தற்போது தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

என்றபோதும் இந்த பேச்சுவார்த்தையின் போது எந்தவொரு இறுதி முடிவும் எட்டப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இன்னுமொரு பேச்சுவார்த்தையை எதிர்வரும் காலங்களில் ரணிலுடன் மேற்கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *