கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியானால் இதனை நிச்சயம் செய்வோம்! டக்ளஸ் எம்.பி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றால் சிறைகளில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளது விடுதலையை நிச்சயம் உறுதி செய்வோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அரசியல் இலாபங்களுக்காக இதுவரை விடுவிக்கப்படாதுள்ள அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஒரு நம்பகமின்மைத் தன்மை காணப்படுகின்றது.

இதை மாற்றியமைத்து அவர்களதும் அவர்களது குடும்பங்களதும் எதிர்காலம் தொடர்பில் நாம் உறுதியான நம்பிக்கை கொடுக்க வேண்டும். இதை நாம் செய்து முடிக்க அரசியல் அதிகாரங்கள் எமது கரங்களுக்கு வேண்டும்.

அந்தவகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் ஸ்ரீ லங்கா பொதுஜன பொரமுன கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அவரது வெற்றியில் எமது மக்களின் பங்களிப்பு இருக்குமானால் அதனூடாக நாம் ஆட்சிக்கு வந்தால் அந்த கைதிகளின் விடுதலையை நிச்சயம் உறுதி செய்வோம்” என கூறியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *