தனிமையில் இருந்த மூதாட்டி கொலையா? தற்கொலையா

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மூதாட்டி ஆடைகள் களைப்பட்ட நிலையில் இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 61 வயதுடைய 3 பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில் மூதாட்டியின் வீட்டில் இருந்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாகவும் குறித்த வீட்டின் நுழைவாயிலில் இருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சடலமாக மீட்கப்பட்ட மூதாட்டி தனிமையில் குறித்த வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மூதாட்டி கொலைசெய்யப்பட்டாரா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *