ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு! யாருக்கு ஆதரவு?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்காமல் சுயாதீனமாக செயற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களாக பிரதான அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்ந்து கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

எனினும் போர் நிறைவடைந்து 10 வருடங்களுக்குள் ராஜபக்ச அரசாங்கத்தின் ஐந்து வருடங்களும் ஐக்கிய தேசிய கட்சியின் ஐந்து வருடங்களும் தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள், சுயாதீமாக செயற்படுவதற்கு கூட்டமைப்பிற்கு அழுத்தம் பிரயோகித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறைந்த பட்சம் தமிழ் மக்களின் கோரிக்கை தொடர்பில் அவதானத்தை பெறுவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த தீர்மானித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *