பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு!

வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் பொதுஜன முன்னணியின் வன்னி தேர்தல் தலைமை காரியாலயம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வவுனியா சிங்கள பிரதேச சபையின் பிரதி தவிசாளர் வசந்த தலைமையில் பொதுஜன முன்னணியின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் பொதுஜன முன்னணியின் கூட்டனிக் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன், சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராஜா,

முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, முன்னாள் வடக்குமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் கூரே மற்றும் கட்சி ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *