கிளிநொச்சியில் 11 வயதுச் சிறுவனுக்கு கசிப்பு பருக்கிய மர்மநபர்களால் பதற்றம்!!
கிளிநொச்சி பகுதியில் 11 வயது சிறுவனிற்கு பலவந்தமாக கசிப்பு பருக கொடுத்த மர்ம
நபர்களிற்கு பொலிசார் வலைவிரித்துள்ளனர்.
நேற்று முன்தினம் (16) மாலை இந்த சம்பவம் முடிந்தது. வன்னேரிக்குளம் பகுதியை சேர்ந்த
சிறுவன் ஒருவனிற்கே கசிப்பு பருகக் கொடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய சிறுவனை வீதியோரம் வாகனத்தில் நின்ற நபர்கள்
மறித்து, பலவந்தமாக கசிப்பு அருந்த வைத்ததாக கூறப்படுகிறது. மாலையில் தள்ளாடியபடி
வீடு திரும்பிய சிறுவனின் கோலம் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுவனை மருத்துவ
சிகிச்சைக்குள்ளாக்கினர்.
அக்கராயன் பொலிசார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.