யாழிற்கு விஜயம் செய்த பிரதமர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இன்று (புதன்கிழமை) மாலை அங்கு சென்ற பிரதமர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை பார்வையிட்டார்.

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பிரதேசத்தில் தேசிய கொள்கைகள் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டத்தினை பார்வையிட்டார்.

குறித்த வீட்டுத்திட்டத்தில் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான 100 இற்கும் மேற்பட்ட வீடுகள் 5 பொது கிணறுகள், மலசல கூடங்கள் என்பன உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதமருடன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் சுமந்திரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மாநகரசபை முதல்வர் ஆர்னோல்ட் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் இந்த விஜயத்தின்போது பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து நாளை யாழ்.சர்வதேச விமான நிலையத்தை திறந்துவைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *