நாளை முதல் ஆரம்பமாகும் யாழ்.விமான நிலையத்தின் சேவைகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் யாழ்ப்பாணம் விமான நிலையம் நாளை திறந்து வைக்கப்பட உள்ளது.

இந்த விமான நிலையத்தின் ஓடு பாதையானது தற்போது 950 மீற்றர் முதல் 1400 மீற்றர் வரை காணப்படுகின்றது. அது இந்நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்தி நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன் இரண்டாம் கட்ட அபிவிருத்தியின் போது 2300 மீற்றராக நீடிக்கப்பட உள்ளது.

குறித்த விமான நிலையத்தில் நாளைய தினம் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதுடன், சென்னையில் உள்ள அலய்ன்ஸ் எயார்லயின்ஸ் அறிமுக விமான சேவையை நாளைய தினம் ஆரம்பிக்க உள்ளது.>அந்தவகையில், ஏ.டி.ஆர் 72 ரக விமானமே அறிமுக பயணத்தை மேற்கொண்டு இங்கு வரவுள்ளதுடன், இதில் 70 பயணிகளுக்கு செல்லக் கூடியதாக அமையும்.

அது அலய்ன்ஸ் எயார்லயின்ஸ் நிறுவனம் வாரத்திற்கு மூன்று முறை சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல பாகங்களுக்கு விமான சேவைகளை மேற்கொள்ளப்பட உள்ளதாக சிவில் விமான சேவையின் துணைத் தலைவர் பிரியந்த காரியபெரும தெரிவித்துள்ளார்.

சிவில் நிர்மாண சேவைகள் அதிகார சபையின் மூலதனம் மற்றும் ஆலோசனைகளுக்கமைய இந்த விமானச் சேவையின் பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் புதிய கவச டெக்சி மற்றும் சாலைகளை அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகளின் போது அமைக்கப்பட்ட விண்வெளி கட்டுப்பாடு கோபுரம், முன்னைய கட்டிடங்கள், தீயணைப்பு நிலையம், அலுவலக வளாகம் மற்றும் ஊடுறுவல் அமைப்பு ஆகியவை வட மாகாண மக்களுக்கு பல்வேறு வகையிலும் சிறந்த சேவையினை வழங்குவதோடு அது அவர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என சிவில் விமான சேவையின் துணைத் தலைவர் பிரியந்த காரியபெரும குறிப்பிட்டுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *