யாழ் டொக்கடர்மாருக்கு சக்களத்திகள் மேல் மோகம் ஏன்?? சித்த வைத்தியர் அதிர்ச்சி்த் தகவல்!!

லரோகமும் சிறுகுறிஞ்சாவும் ?

நீரழிவு நோய்க்கு சிறுகுறிஞ்சா நிவாரணம் அழிக்குமா? கட்டுப்படுத்துமா? அல்லது பாதிப்பை ஏற்படுத்துமா? இதுதொடர்பான குழப்பம் மக்களிடம் இருப்பதாகவும், அதனை யாழ்போதனா வைத்தியசாலை மருத்துவர்கள் கூறியுள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக அறியக்கூடியதாக இருந்தது. சில வாரங்களுக்கு முன்னர் சிறுகுறிஞ்சா தொடர்பான ஆராய்ச்சி செய்யவுள்ளதாகவும் அதற்கு தேவையான சிறுகுறிஞ்சா தேவையெனவும் 1கிலோ 100 ரூபாப்படி பெற்றுக்கொள்ளப்படுமெனவும் பத்திரிகைகளில் விளம்மபரங்கள் வந்துள்ளன.
இதுதொடர்பாக துறைசார் மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டதா? அதாவது சிறுகுறிஞ்சா, சலரோகம் தொடர்பான சித்த, ஆயுள்வேத மருத்துவர்களிடம் வினவப்பட்டதா? சந்தேகங்கள் கேட்கப்பட்டதா? என்பது பற்றி தெரியாது. அதேபோல மக்கள் சிறுகுறிஞ்சா தொடர்பாக மருத்துவர்களிடம் கேட்கும்போது அதற்குரிய மருத்துவர்களான சித்த அல்லது ஆயுள்வேத அல்லது பாரம்பரியமருத்துவர்களிடம் சிபாரிசு செய்யப்பட்டனரா ? என்பதும் தெரியாது. எனினும் சிறுகுறிஞ்சா தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டியது ஒவ்வொரு சித்தமருத்துவரதும் கடமையாகும்.

சிறுகுறிஞ்சா எனப்படும் மருத்துவ மூலிகையின் பெயர் இன்று பொதுவான பெயராக உள்ள நிலையில் உண்மையான சிறுகுறிஞ்சா எனப்படுவது நான் அறிந்த வகையில் மக்கள் பெருமளவாக பாவிக்கக்கூடியளவில் வடமாகாணத்தில் இல்லை எனலாம். சித்தமருத்துவத்தில் குறிப்பிட்டுள்ள சிறுகுறிஞ்சா எனப்படும் சர்க்கரைகொல்லி மூலிகையின் தாவரவியற் பெயர் Gymnema sylvestre. ஆனால் வடமாகணத்தில் மக்கள் புழக்கத்தில் காணப்படும் சிறுகுறிஞ்சா வகைககள் வெவ்வேறு வகையான உப இனங்காளாகும். Gymnema எனப்படும் சிறுகுறிஞ்சாவில் 50 வகையான உப இனங்கள் காணப்படுகின்றன. இலங்கையில் Gymnema lactiferum, Gymnema rotundatum, Gymnema sylvestre, போன்ற பல்வேறு உப இனங்கள் காணப்படுகின்றன. ஆனால் பெரும்பாலும் சக்களத்தி இனங்களே அதிகளவில் காணப்படுகின்றன. அதாவது சித்தமருத்துவத்தில் குறிக்கப்பட்ட சிறுகுறிஞ்சாவை ஒத்த உப இனங்கள் “சக்களத்தி” என குறிப்பிடப்படுகின்றன.
Gymnema sylvestre என்பதே உண்மையான சிறுகுறிஞ்சாவாகும். இதன் இலைகள் மிருதுவாகவும், இலையின் கீழ்ப்பகுதியில் silver dust போன்ற துகள்களும் காணப்படும். இலைகள் பளபளப்பாகவும் காணப்படாது. வாயில்போட்டு சுவைக்கும்போது மிகுந்த கசப்புசுவை காணப்படும். ஏனைய சக்களத்தி இனங்களில் silver dust போன்ற அமைப்புக்காணப்படாது. ஆனால் பளபளப்பு காணப்படும். இவ்வாறான சக்களத்தி இனங்களையே மக்கள் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். அவற்றினால் முழுமையான பயன்கிடைக்காது. சக்களத்திகளின் பயன், தீமைகள் மக்கள் அறிந்ததே.
தற்கால தட்பவெப்பநிலை மாற்றங்கள், உயிரின பல்வகைமை மாற்றங்கள் உண்மையான சிறுகுறிஞ்சாவின் பரம்பலில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இவைதொடர்பான விளக்கங்கள் ஆறுதலாகவும், இலவசமாகவும் அரச சித்தலைத்தியசாலைகளில் சித்த, ஆயுள்வேத ,யுனானி மருத்துவர்களால் வழங்கப்பட்டுவருகின்றது. எவ்வாறு உணவாக பாவிப்பது? மருந்தாகப்பாவிப்பது? எவற்றுடன் பாவிப்பது? எவ்வளவுகாலம் பாவிப்பது? தொடர்பான விளக்கங்கள் போதியளவு வழங்கப்படுகின்றது.
மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.

“கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே”

அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.
துறைசாரருடன் ஆலோசிக்காமல் சக்களத்திகளை ஆய்வுக்குட்படுத்தி மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி, தமிழர் மருத்துவத்தின் பெறுமதியையும் தரங்குறைக்கும் செயற்பாடு ஏற்றுக்கொள்ளமுடியாததாகும். இதற்கு உரிய அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

“சித்தர்வாக்கு எத்திசையிலும் பொய்யாது.”

சித்தமருத்துவர் தி.சுதர்மன்


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *