வடமாகாண இளைஞர் யுவதிகளின் கவனத்திற்கு..! உங்களிற்கான அரியவாய்ப்பு

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக வடமாகாணத்திலுள்ள வேலையற்ற இளைஞர்களை தேசிய ஊழியர் படையணியில் இணைத்துக்கொள்வதற்கும், தொழிற்தகுதி மற்றும் தொழில்விருத்தி செயற்திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்தகுதிச்சான்றிதழ்களை (NVQ) வழங்குவதற்கான குறுங்காலத் தொழிற்பயிற்சி தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு இம்மாதம் நடைபெறவுள்ளது.

விழிப்புணர்வுக் கருத்தரங்கை ஆளுநர் செயலகம், மாவட்டச் செயலகம் மற்றும் Hightec Lanka International ஆகியன இணைந்து வடமாகாணத்தை சேர்ந்த 5 மாவட்ட செயலகங்களிலும் நடாத்தவுள்ளது.

இந்த கருத்தரங்கில் மின் இணைப்பாளர், கனரகவாகன இயக்குனர்,கட்டுமானப்பணியாளர், வாகனம் திருத்துநர், AC திருத்துநர், தளமேற்பார்வையாளர், AutoMobile, AutoElectrical Technician போன்ற பயிற்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் கலந்துகொள்ளலாம்.

இது தொடர்பான பதிவுகளை பிரதேச செயலகங்களில் பதிவு செய்தவர்கள் மற்றும் பதிவுகளை மேற்கொள்ள தவறியவர்களும் அந்தந்த மாவட்டச் செயலகங்களில் இடம்பெறுகின்ற செயலமர்வுகளில் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் கிளிநொச்சி ,யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் நேற்றும் , முன்தினமும்

இடம்பெற்றிருந்தது.

இன்று வவுனியா – மாவட்ட செயலகம் – 16/10/2019 – புதன்கிழமை – 9.30am – 12.30pm

மன்னார் – மாவட்ட செயலகம் – 17/10/2019 – வியாழக்கிழமை – 9.30am – 12.30pm

இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *