மகிந்த ஆட்சியில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பேன்! கோத்தபாய ராஜபக்ச

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எமது கொள்கையின் காரணமாகவே சகல கட்சிகளும் எம்முடன் இணைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எமக்கு ஆத்திரத்தினாலோ குறுகிய நோக்கத்திற்காகவோ தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்பட முடியாது. ஆத்திரத்தினால் எதிராளிகளின் சூழ்ச்சிக்கு உட்பட்டு தவறாக நடப்பதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

எம்மோடு இணைந்துள்ள கட்சிகள் அனைத்தும் எம்முடைய கொள்கைககளுக்காகவே இணைந்துள்ளன. எம்மிடம் தெளிவான மக்கள் விரும்பும் கொள்கை மற்றும் மக்களை மேம்படுத்தும் திட்டங்களும் உள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எமக்கு பெரும் பலமாகும். நூற்றுககு 60 வீதத்திலிருந்து நூற்றுக்கு 72 வீதமாக அதன் மூலம் எமது பலத்தை அதிகரிக்கக் கூடியதாகவுள்ளது. நாம் அவர்களை அன்புடனும் கௌரவத்துடனும் வரவேற்கின்றோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, டீ.ஆர். ராஜபக்ஷ ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது. 1956ல் மக்கள் புரட்சியை ஏற்படுத்திய கட்சியாகும்.

நாம் அனுபவிக்கும் மக்களுக்கு இயைவான அதிகளவு கொள்கைகளை நாட்டிற்கு அறிமுகம் செய்த கட்சியாகும். மஹிந்த ராஜபக்ச இரு முறை ஜனாதிபதியான கட்சியாகும்.

தேசிய பாதுகாப்புக்கே நாம் முதலிடம் வழங்குவோம். நாட்டின் பாதிப்படைந்துள்ள பாதுகாப்பு இயந்திரத்தை நாம் பலப்படுத்துவோம்.

அதன் மூலம் இந்நாட்டின் பயமில்லாமல் வாழக்கூடிய நாடாக மாற்றுவோம். புலனாய்வுப் பிரிவினர் சரியான முறையில் இயங்கக் கூடியவகையில் அதிகாரம் மற்றும் சட்டப் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுப்போம்.

புதிய லிபரல்வாதிகளால் நிரம்பிய பிற இன மக்களின் நோக்கத்தை நிறைவேற்றும் அரசல்லாத நிறுவனங்கள் மூலம் வாழும் அரசுக்கு தேசிய பாதுகாப்பை பலப்படுத்தவும் தேசியத்துவத்தை மதிக்கவும் முடியாது.

எனது முதலவது ஆண்டில் கல்விக்காக பாரிய முதலீடுகளை செய்வேன். இன்று தவறான கல்வியால் இளைஞர் யுவதிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு வருடமும் உயர் கல்விக்கு தோற்றுபவர்களில் இரண்டு இலட்சம் பேர் பல்கலைக்கழகம் செல்ல தகுதி பெற்றாலும் 35,000 பேரே பல்கலைக்கழகங்களுக்கு செல்கின்றார்கள்.

தொழில்நுட்ப கல்லூரிகள் மூலம் வேலைக்கு தகுதியான, பொருளாதாரத்துககு பொருத்தமான வேலைகளை நல்ல சம்பளத்துடன் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

நாட்டை தன்னிறைவு செய்வதற்கும் விவசாயிகளை வாழவைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை நாம் எடுப்பதற்கு தயாராகவுள்ளோம். இன்றும் எமது நாட்டில் வறிய மக்கள் வாழ்கின்றார்கள்.

நாடொன்று அபிவிருத்தி அடைவது என்பது சமூகத்தில் ஒரு பிரிவினர் மாத்திரம் அபிவிருத்தியடைவதல்ல. நாட்டின் ஒரு பிரிவினர் வறியவர்கள் என்றால் அங்கு உண்மையான அபிவிருத்தி ஏற்பட்டிருக்காது.

நாம் அனைவரையும் வறுமையிலிருந்து விடுவிக்க மக்கள் விரும்பும் பொருளாதாத்தை உருவாக்க வேண்டும். நிங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள். நான் உங்களுக்காக கடமையை நிறைவேற்றுவேன் என்றார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *