யாழ்ப்பாணத்தை சேர்ந்த 6 பேர் சிலாபத்தில் கைது

சிலாபத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த சந்தேகத்திற்குரிய 6 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடு செல்லும் நோக்கில் இவர்கள் தங்கியிருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சிலாபம், நீர்கொழும்பு பகுதிகள் வழியாக ஆழ்கடல் படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *