டக்ளஸ் மற்றும் மைத்திரியின் பலரைத் துாக்கினார் சஜித்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலர் இன்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்துகொண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இவ்வாறு ஆதரவு வழங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜேமுனி சொய்சா, விக்டர் அன்டனி பெரேரா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் சிலரே இவ்வாறு சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட சுயாதீன உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் 44 பேர் சஜித்திற்கு ஆதரவாக இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட, சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விக்டர் அன்டனி பெரேரா, ‘தற்போதும், எதிர்காலத்திலும் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையிலான முரண்பாடுகளை எம்மால் ஒருபோதும் தடுத்து நிறுத்தமுடியாது.

அவ்வாறிருக்க இலங்கையின் நிலப்பரப்பை சீனாவிற்கு விற்பனை செய்வதன் ஊடாக ஏற்படக்கூடிய ஆபத்து எத்தகையது என்பதை தேசப்பற்றாளர்கள் போன்று பேசுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தரப்பு சிந்தித்துப் பார்க்கவில்லையா?’ என்று கேள்வி எழுப்பினார்.

எமது சந்ததி கட்சி (அபே பரபுற பக்ஷய), இலங்கை தேசிய செயற்திட்டம், தேசிய மக்கள் முன்னணி (ஜாதிக ஜனதா பெரமுன), தேசிய மலையக முன்னணி (ஜாதிக கந்துரட்ட பெரமுன), எங்கள் மக்கள் கட்சி (அபே ஜனதா பக்ஷய) ஆகிய கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு தமது ஆதரவை வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக திஸ்ஸ அதநாயக குறிப்பிட்டார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *