சஜித்திற்கு ஆதரவாக யாழில் தேர்தல் அலுவலகங்கள்

2019 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் வீடமைப்பு அமைச்சருமான சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான தேர்தல் அலுவலகங்கள் யாழ். மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் – சுன்னாகம், சாவகச்சேரி, கரவெட்டி, கோப்பாய் மற்றும் தெல்லிப்பழை ஆகிய பகுதிகளில் குறித்த தேர்தல் அலுவலகங்களை திறந்து வைத்துள்ளார்.

இந்த தேர்தல் உப அலுவலகங்களின் மூலம் பொதுமக்கள் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் முறையிட முடியும் எனவும், தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *