தமிழர்களின் வாக்குகள் தொடர்பில் கோத்தபாயவிற்கு கிடைத்த அதிர்ச்சிகர தகவல்

கோட்டா தரப்பின் வடக்கு தமிழர்களின் வாக்குகள் குறித்த எதிர்பார்ப்பு பிரயோசனமற்றது – தமிழ் எம்.பி.க்களின் ஆலோசனை

கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்கு வடக்கு மக்களின் தமிழ் வாக்குகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அவர்களது வாக்குகளை பெற பலவித முயற்சிகளில் மொட்டு கட்சி ஈடுபட்டு வருகிறது.

விசேடமாக ஶ்ரீலங்கா பொதுசன பெரமுணவினர் வடக்கு தமிழ் வாக்குகளை பெற கடும் முயற்சியில் ஈடுபட்டாலும் அது பலனற்றது என அவர்களோடு இணைந்துள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோடி காட்டியுள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்கினால் கூட சாதாரண பொது மக்கள் கோட்டாபயவை மட்டுமல்ல ராஜபக்ச குடும்பத்தையே நிராகரிப்பதாக தேசிய பட்டியலில் அங்கம் வகிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த தரப்பிடம் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே வடக்குக்காக செய்யும் பிரயத்தனத்தை குறைத்து தெற்கே வாக்குகளை குவிக்கும் முயற்சியை செய்யுமாறு அவர் மேலும் வலியுத்தியுள்ளார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *