விடுதலைப் புலிகளுடன் தொடர்பு! மலேசியாவில் ஆசிரியர் ஒருவரும் கைது

விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கடந்த சனிக்கிழமை மலேசிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட ஐவரும் மலேசியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் பயங்கரவாத தடுப்புப்பிரிவான E8 அமைப்பின் தலைவர் Datuk Ayob Khan Mydin Pitchay இதனை தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் ஆசிரியர் எனவும் அவர் கூறியுள்ளார். கைதுசெய்யப்பட்ட 58 வயதான ஆசிரியர் – செரங்கூர் பிரதேசத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு பண ரீதியான உதவிகளை செய்தார், அந்த அமைப்பின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார், அந்த அமைப்புக்கு உரித்தான பொருட்களை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘கைது செய்யப்பட்டவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்புக்கான நிதியை தமது சொந்த வங்கிக்கணக்குகளின் ஊடகவே பரிமாற்றம் செய்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வந்ததா என்பது குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

விசாரணைகளின் பிரகாரம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, கைது செய்யப்பட்ட அனைவரையும் தடுப்புக்காவலில் வைத்திருப்பது அவசியமாகவுள்ளது என்றும் அவர் கூறினார்.

இரண்டு பகுதிகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட 12 பேரும் தற்போது தடுப்புக்காவலில் உள்ளனர் என்றும் Datuk Ayob Khan Mydin Pitchay தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *