யாழ் இந்துக்கல்லுாரி அதிபராக செந்தில்மாறன் ரட்ணம் நியமிக்கப்பட்டார்!!

யாழ் இந்துக்கல்லுாரிக்கு அதே கல்லுாரியில் கல்வி கற்ற 2002 உயர்தர வகுப்பினைச் சேர்ந்த செந்தில்மாறன் அதிபராக நியமிக்கப்பட்டதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையானால் அதிபர் செல்லத்துரைக்குப் பிறகு மிக அதிககாலம் அதிபராகப் பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு உண்டு.

மிக நீண்டகாலம் பணியாற்றிய செல்லத்துரை, குமாரசுவாமி அதிபர் காலங்களிலேயே கல்லூரி பெருவளர்ச்சி பெற்றதைக் குறிப்பிட வேண்டும்.

அந்த அதிபர்கள் பலரது கருத்துக்களை உள்வாங்கி அதேநேரம் சுயமான தற்துணிவான செயற்பாடுகளை முன்வைத்தவர்கள் என்பதே கல்லூரியின் வரலாற்றிலிருந்து நாம் அறிந்து கொள்வதாகும்.

அவ்வகையில் குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டிராமல் அதிபரது செயற்பாடுகளை வலுப்படுத்துவதாகவும் அதிபர் தாம் நினைத்தைச் செய்ய வேண்டும் என எண்ணாமல் அவர் சரியானதைச் செய்யத் தேவையான கருத்துக்களையும் வளங்களையும் வழங்குவதாகவும் கல்லூரிச் சமூகம் தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.

Image may contain: 1 person

முகப்புத்தகப் பதிவு


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *