யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் இயந்திரம் வழங்கி வைப்பு

நன்கொடையாளர்களின் நிதிப்பங்களிப்பில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

சி.ரி.ஸ்கானர் சிகிச்சை பிரிவு யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இதன்போதே சி.ரி.ஸ்கானர் இயந்திரங்கள் நன்கொடையாளர்களால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், சுகாதார சுதேச போசணை அமைச்சின் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *