நெல்லியடி பொலிஸாாினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்க்கு நேர்ந்த துயரம்

யாழ்.நெல்லியடி பொலிஸாாினால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நபா் ஒருவர் உயிாிழந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நபரை பொலிஸாா் அடித்து கொலை செய்ததாக உறவினா்கள் பொலிஸாா் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குடும்ப வன்முறை தொடர்பில் குடும்பத்தலைவருக்கு எதிராக நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் விசாரணைக்காக அவரை அழைத்த போதும் அவர் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தராமல் தலைமறைவாகியிருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் அவர் வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் நிற்பதாக பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டதன் அதனடிப்படையில் நேற்றிரவு 7.30 மணியளவில்

அங்கு சென்ற பொலிஸார் அவரை அழைத்து சென்றுள்ளனர்.

பொலிஸ் நிலையத்தில் வைத்து குடும்பத்தலைவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட வேளை, இரவு 10 மணியளவில் அவர் வாந்தி எடுத்ததோடு, தான் அலரி விதை உட்கொண்டதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் அங்கு அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த 40 வயதான ஜே.ரூபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் உடற்கூற்று பரிசோதனை இடம்பெறாததால் அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை எனவும் தெரிவிகப்பட்டுள்ளது.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *