தகுந்த தருணத்திற்காக காத்திருக்கும் கூட்டமைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சித்தாவல்கள் மற்றும் ஆதரவுகள் அரசியல் அரங்கில் பரவலாக நடைபெற்று வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இருந்தபோதிலும், ஒரு சிலர் வேட்பாளராக தகுதியுடையவர்களா என்பது தொடர்பில் கேள்வி நிலவுகிறது.எந்த கட்சியாக இருந்த போதிலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள 25 % தமிழ்மக்களின் வாக்குகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் வேட்பாளர்களா உள்ளனர். ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கப்போகும் சக்திகளாக தமிழ் மக்களின் வாக்குகளே உள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கில் பிரதான கட்சியாக விளங்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இந்த தேர்தலில் யாருக்கு என்பது தொடர்பில் இன்னும் அறிவிக்கவில்லை.

தமிழ் மக்களின் வாக்குகளை பெறுவதற்காக தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், இதுதொடர்பில் இதுவரையில் கூட்டமைப்பு எந்தவொரு தீர்மானங்களையும் எடுக்கவில்லை.

இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை எமது செய்தி பிரிவு தொடர்புகொண்டு வினவிய போது,

எதிர்வரும் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பிலான முடிவை கூட்டமைப்பு இன்னும் எடுக்கவில்லை. இது தொடர்பில் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்தாலோசித்து வருகின்றோம். தகுந்த நேரத்தில் சரியான முடிவை எடுத்த பின்னர் அது தொடர்பில் அறிவிப்போம் என தெரிவித்தார்.


அன்புள்ள வாசகர்களே! நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு எமது நியுஜப்னா நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *